சாலையில் வளர்ந்த செடிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருவள்ளூர்:திருவள்ளூர்-புட்லுார் சாலையில் வளர்ந்த செடிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்துள்ள புட்லுார் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமவாசிகள் திருவள்ளூர் ரயில் நிலையம், மணவாளநகர், ஸ்ரீபெரும்புதுார் செல்வோர் புட்லுாரியில் இருந்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கற்குழாய் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.பணிக்கு செல்வோரும், அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், புட்லுார்வாசிகள் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இச்சாலையில், ஒரு கி.மீட்டர் துாரம் மட்டுமே தார் சாலையாக உள்ளது. மீதம் உள்ள பகுதி குண்டும், குழியுமாக மாறிவிட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், சாலையோரம் முட்செடிகள் வளர்ந்து, சாலையை மறைத்து நிற்கின்றன. இதனால், வாகனங்களில் செல்வோர் செடிகளால் சிரமப்படுகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைத்து, சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, கிராமவாசிகள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.