காக்களூர் தாமரை குளக்கரையில் பிளாஸ்டிக் சேகரிப்பு விழிப்புணர்வு
திருவள்ளூர்:காக்களூர் தாமரைக் குளக்கரையில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திருவள்ளூர் அடுத்த, காக்களூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள தாமரைக் குளத்தில், நேற்று, பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உதவி கலெக்டர் ஆயுஷ் குப்தா திட்டத்தினை துவக்கி வைத்து பேசியதாவது:தமிழகம் முழுதும் மாவட்ட நிர்வாகம், ஊரக, உள்ளாட்சி மற்றும் மாசு கட்டுப்பட்டு வாரியம் இணைந்து, நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவினை சேகரிப்பு மற்றும் துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், துாய்மை பணி துவக்கப்பட்டு உள்ளது.ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை குளம் மற்றும் குட்டைகளில் போடுவதை தவிர்த்து, சுத்தமான சுகாதாரத்தை உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் செல்வ இளவரசி, திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.