மேலும் செய்திகள்
காலிறுதியில் ராமநாதன் ஜோடி
23-Apr-2025
திருத்தணி,திருவள்ளூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி, நேற்று ரேஷன் கடை அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, ஹேமநாதன், 42, என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதையறிந்த சிறுமியின் பெற்றோர், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், ஹேமநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில், ஹேமநாதன் பணியாற்றி வருகிறார் என்றும், அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன எனவும் விசாரணையில் தெரிய வந்தது.
23-Apr-2025