மேலும் செய்திகள்
விபத்தில் போலீஸ்காரர் பலி
06-Oct-2024
சென்னை, எண்ணுார் காவல் நிலையத்தில், போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றியவர் லக்ஷ்மணன், 37. இவர், நேற்று காலை 6:00 மணியளவில், அம்பத்துாரில் நடக்க இருந்த காவல் துறை பயிற்சி அணிவகுப்பில் பங்கேற்க, -மணலி - எண்ணுார் விரைவுச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.எதிர்பாராத விதமாக, சாலையோரம் நின்ற கிரேன் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில், பலத்த காயம் அடைந்தவரை, அங்கிருந்தோர் மீட்டு, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர், காலை 8:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரூ.25 லட்சம் நிவாரணம்
இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், 'போக்குவரத்து போலீஸ்காரர் லஷ்மணனின் உயிரிழப்பு, தமிழக காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்' என, இரங்கல் தெரிவித்தார். அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.
06-Oct-2024