மேலும் செய்திகள்
பரமக்குடியில் கவனிப்பாரற்ற நிலையில் அம்மா உணவகம்
04-Oct-2025
திருவள்ளூர், பூண்டி நீர்த்தேக்கம் அருகில், சுற்றுலா துறை சார்பில் கட்டப்பட்ட, 3.58 கோடி ரூபாய் மதிப்பிலான உணவக கட்டடம் திறந்த நிலையில், உடனடியாக மூடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் அருகே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சுற்றுலா மேம்பாட்டு உணவகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு சொந்தமான நிலத்தில் நவீன வசதிகளுடன் உணவகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம், 16 'டைனிங் டேபிள்'களை கொண்டுள்ளது. பார்வையாளர் மாடத்துடன், இரண்டு தளங்களில் இந்த உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆக., 1ம் தேதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து, கலெக்டர் பிரதாப், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேரில் பார்வையிட்டு, இனிப்பு வழங்கினர். ஆனால், துவக்க விழாவில் மட்டுமே இயங்கிய உணவகம், அதன்பின், திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. அங்குள்ள பூங்கா, உணவகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உரிய பராமரிப்பின்றி, செடிகள் வளர்ந்துள்ளது. பெயரளவிற்கு திறந்து வைத்த உணவகம் மற்றும் பூங்காவை, மாவட்ட சுற்றுலா துறையினரின் அலட்சியத்தால், முறையாக பராமரிக்கப்படவில்லை. முதல்வர் திறந்த உணவகத்திற்கே இந்த நிலை என்றால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துவக்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளை, அதிகாரிகள் முறையாக பராமரித்து செயல்படுத்துகின்றனரா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
04-Oct-2025