உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூர் டோல்கேட் அருகில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், எட்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், 'புளூடூத்' வாயிலாக ரேஷன் பொருள் விநியோகிக்க, ஒருவருக்கு 10 நிமிடங்கள் தாமதம் ஆவதால், பொதுமக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது 'புளூடூத்' விற்பனையை முறையை நீக்க வேண்டும்.விடுமுறை நாளில் பணி புரிய வலியுறுத்த கூடாது. விற்பனையாளரின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள இடத்திலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நிர்வாகிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை