உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இருளில் ஆரம்ப சுகாதார நிலையம் நோயாளிகள், பெண்கள் அச்சம்

இருளில் ஆரம்ப சுகாதார நிலையம் நோயாளிகள், பெண்கள் அச்சம்

திருவாலங்காடு,:திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு சின்னம்மாபேட்டை, வீரராகவபுரம், மணவூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும் 150க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். அதேபோல, விபத்தில் சிறு காயமடைந்தவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என, 10க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வளாகத்தில் மின் விளக்குகள் பொருத்தப்படாததால், இரவு நேரங்களில் வளாகம் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. இதனால், இரவில் சிகிச்சைக்காக வருவோர், 'சிகிச்சையில் இருப்போர் மற்றும் அவரது உறவினர்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.மேலும் பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடத்தின் அருகே அமர்ந்து இரவில் மதுவை குடித்து வரும் போதை ஆசாமிகளால், பல்வேறு இன்னலுக்கு பெண்கள் ஆளாகி வருகின்றனர்.எனவே, ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை