உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையோர உணவு கழிவுகளில் இரை தேடும் கால்நடைகளால் சிரமம்

சாலையோர உணவு கழிவுகளில் இரை தேடும் கால்நடைகளால் சிரமம்

பொன்னேரி: சாலையோரங்களில் உணவு கழிவுகள் கொட்டப்படும் நிலையில், அவற்றில் இரை தேடுவதற்காக கூட்டமாக வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொன்னேரி அடுத்த காரனோடை - சோழவரம் மாநில நெடுஞ்சாலையின் ஓரங்களில், உணவு கழிவுகள் கொட்டப்படுகின்றன. காய்கறி, பழம், ஹோட்டல் களின் கழிவுகள் என, சாலையோரத்தில் குவிந்து கிடக்கின்றன. இவற்றில் இருக்கும் உணவு கழிவுகளை உண்பதற்காக, கால்நடைகள் கூட்டம் கூட்டமாக மாநில நெடுஞ்சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை, சாலையில் ஓய்வெடுப்பது, ஒன்றோடு ஒன்று சண்டையிடுவது என இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகின்றனர். திடீரென சாலையின் குறுக்கே செல்லும் போது, வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையோரங்களில் உணவு கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கவும், சோழவரம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ