உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  களிமண் கிடைப்பதில் சிக்கல் அகல்விளக்கு தயாரிப்பு பாதிப்பு

 களிமண் கிடைப்பதில் சிக்கல் அகல்விளக்கு தயாரிப்பு பாதிப்பு

ஆர்.கே.பேட்டை: தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால், அகல்விளக்குகள் தயாரிப்பதற்காக களிமண் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருநாளில் கோவில்கள் மற்றும் வீடுகளில் அகல்விளக்கு தீபம் ஏற்றுவது பக்தர்களின் வழக்கம். இதையொட்டி, மண்பாண்ட தொழிலாளர்கள் முன்கூட்டியே அகல்விளக்குகள் தயாரிப்பது உண்டு. ஆர்.கே.பேட்டை அடுத்த சிங்கசமுத்திரம், ராஜாநகரம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் தொடர் மழையால் நிரம்பியுள்ளன. இதனால், ஏரிகளில் இருந்து களிமண் எடுக்க முடியாமல், தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். இதனால், அகல் விளக்கு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்