மேலும் செய்திகள்
கையாடல் ஊழியரை கண்டுகொள்ளாத கல்வி அதிகாரிகள்!
10-Feb-2026
சென்னை: ''திருத்தணி பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றி, கருணாநிதி பெயரை சூட்டினால், மக்கள் போராட்டம் வெடிக்கும்,'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில் புதிதாக திறக்கும் மதுக்கடைகளை தவிர, மற்ற அனைத்து கட்டடங் களுக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டுவதே வாடிக்கையாக உள்ளது. தற்போது, திருத்தணி பேருந்து நிலையம், ம.பொ.சிவஞானம் என்ற பெயரில் உள்ளது. அந்த பெயரை, 'கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம்' என, மாற்ற முயல்வது அதிகாரத்தின் உச்சம். எனவே, புனரமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ள திருத்தணி பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றினால், மக்கள் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Feb-2026