மீஞ்சூரில் போராட்டம்
மீஞ்சூர்: மீஞ்சூர் ஒன்றியத்தில் காலை உணவு திட்டத்திற்கான உணவு தயாரிப்பதற்கு, 100க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் நியமிக்கபட்டு உள்ளனர். நேற்று அவர்கள், மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பணி நிரந்தரம் கோரி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கான ஒப்பந்தம் காலம் முடிந்து, எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படும் சூழல் இருப்பதால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பி.டி.ஓ., அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.