பெண்ணிடம் பாலியல் சீண்டல் மருத்துவமனை ஊழியர் கைது
சோழவரம், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியைச் சேர்ந்த, 38 வயது பெண், உடல்நிலை பாதிப்பு காரணமாக, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, நேற்று சென்றார்.அங்கு, அவருக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்காக அவர், அதே மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் பிரிவிற்கு சென்றார்.அப்போது, மருத்துவமனை உதவியாளர் ஒருவர், பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.அதையடுத்து அப்பெண், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார், மருத்துவ சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.இதையடுத்து, மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 34, என்பவரை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.