உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 492 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 492 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 492 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 48, சமூக பாதுகாப்பு திட்டம் 27, வேலைவாய்ப்பு வேண்டி 18, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 36 மற்றும் இதர துறை 363 மனுக்கள் என, மொத்தம் 492 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், மூளை முடக்குவாதம் குறைபாடு காரணமாக, இரு கால்கள் பாதிப்படைந்த ஆறு பேருக்கு, 6.30 லட்சம் ரூபாய் மதிப்பில், மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ