உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம்

மக்கள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 488 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிலம் சம்பந்தமாக 58, சமூக பாதுகாப்பு திட்டம் 42 உட்பட, மொத்தம் 488 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஊத்துக்கோட்டை வட்டம்- பேராண்டூர் ராஜ்குமார் என்பவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, ஒரு லட்சம் ரூபாய் காசோலையை, அவருடைய தந்தை குமாரிடம் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை