மேலும் செய்திகள்
கிடப்பில் சாலைப்பணி கடப்பாக்கம் மக்கள் அவதி
17-Jun-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையை இணைக்கும் மசூதி தெரு சாலை பணி இரண்டு மாதங்களாக கிடப்பில் உள்ளதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் நகராட்சி, ஒன்றாவது வார்டுக்கு உட்பட்டது மசூதி தெரு. சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், சி.வி.நாயுடு சாலையை ஒட்டி இந்த தெரு அமைந்துள்ளது. அந்த தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் உள்ளன. இந்த தெருவில் உள்ள தார் சாலை சேதமடைந்து, குண்டும், குழியுமாக மாறி விட்டது.இதையடுத்து, சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என, மசூதி தெரு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து, இரண்டு மாதங்களுக்கு முன், சாலையை அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக, குண்டும், குழியுமாக உள்ள பகுதிகளில் ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன.ஆனால், சாலை மேடாக இருப்பதால், தார் சாலையை பெயர்த்து, மண் குவியலை அப்புறப்படுத்திய பின், அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.இதனால், சாலை அமைக்கப்படாமல் அப்பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பள்ளமான பகுதிகளில் நிரப்பப்பட்ட ஜல்லி கற்களால், மக்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, தார் சாலையை பெயர்த்து, அதன் மேல் புதிய சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
17-Jun-2025