உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள புட்லுார் ஊராட்சி அலுவலகம்

பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள புட்லுார் ஊராட்சி அலுவலகம்

புட்லுார் : புட்லுார் ஊராட்சி அலுவலகம் பராமரிப்பின்றி, சேதமடைந்து 5 ஆண்டுகளாகியும், புதிய கட்டடம் கட்டப்படாமல் உள்ளது.திருவள்ளூர் ஒன்றியம், புட்லுார் ஊராட்சியில், 1,500 வீடுகளில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். புட்லுார் ஊராட்சி அலுவலகம், முறையானபராமரிப்பு இல்லாமல், 5 ஆண்டுகளாக சேதமடைந்து, பாழடைந்து கிடக்கிறது. இதனால், தற்காலிகமாக ஊராட்சி அலுவலகம், புட்லுார் - அரண்வாயல் சாலையில் உள்ள, இ - சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இ - சேவை மையமும் செயல்பாட்டில் இல்லை.இந்த நிலையில், சேதமடைந்த பழைய ஊராட்சி கட்டடத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அருகில் உள்ள வீடுகளுக்கு புகுந்து விடுவதால், பகுதிவாசிகள் கடும் அச்சமடைந்து உள்ளனர்.எனவே, பாழடைந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்ட வேண்டும் எனவும், இ - சேவை மைய கட்டடத்தை முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும், கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை