திருத்தணி சரவணபொய்கையில் தெப்பம் கட்டும் பணி தீவிரம்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் சரவணபொய்கை குளத்தில் தெப்பம் கட்டும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா ஒட்டி,வரும், 16ம் தேதி முதல், 18ம் தேதி வரை சரவணபொய்கை என்ற குளத்தில் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா நடக்கிறது. தெப்பத்தில் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்காக தற்போது சரவணபொய்கை குளத்தில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.