உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரு சாலைகளை இணைக்க ரயில் பயணியர் கோரிக்கை

இரு சாலைகளை இணைக்க ரயில் பயணியர் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவை, ரயில் நிலைய வளாகத்துடன் இணைக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில், பழைய தபால் தெரு சாலை அமைந்தள்ளது. இடைப்பட்ட பகுதி முழுதும் அரசு புறம்போக்கு நிலங்களாக உள்ளது.இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, அவ்வழியாக ரயில் பயணியர் சென்று வந்தனர். தற்போது, மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பழைய தபால் தெருவில், ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.தடைகளாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளால், 1 கி.மீ., துாரம் சுற்றிவர வேண்டிய நிலையில் ரயில் பயணியர் உள்ளனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் காலவிரயத்தால், ரயில் பயணியர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய வளாகத்துடன் பழைய தபால் தெரு சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை