உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை அவசியம் மத்திய அமைச்சரிடம் எம்.பி., மனு

மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை அவசியம் மத்திய அமைச்சரிடம் எம்.பி., மனு

மீஞ்சூர், மீஞ்சூர் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள ரயில்வே கேட் வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. .இதில், ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் கிராமவாசிகள் அங்குள்ள 'கேட்' இடுக்குகளில் புகுந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.விபத்து அபாயங்களை தவிர்க்க, கடந்த ஆண்டு, டிசம்பரில், இருசக்கர வாகனங்கள் ரயில்வே கேட்டின் இடுக்குகளில் புகுந்து செல்வதை தடுக்க, இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.இதனால் இருசக்கர வாகனங்கள் ரயில்வே கேட்டில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இருசக்கர வாகனங்கள் மற்றும், நடந்து செல்பவர்களின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமானங்கள் தயாரிக்கப்பட்டு, அது பயனுக்கு வராமல் இருப்பது குறித்தும் திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்திலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அதையடுத்து எம்.பி., கடந்த மாதம், 29ம் தேதி, ரயில்வே அதிகாரிகளுடன் மீஞ்சூரில் ஆய்வு மேற்கொண்டார். பின், சுரங்கப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, மீஞ்சூரில் ரயில்வே கேட்டில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் நிலை, அங்கு சுரங்கப்பாதை அமைப்பதற்கான அவசியம் குறித்தும், துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு அளித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை