உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி குடியிருப்பு பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழைநீர்

திருத்தணி குடியிருப்பு பகுதியில் ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழைநீர்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்டது வள்ளியம்மாபுரம் கிராமம். இங்கு மாநில நெடுஞ்சாலையோரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.இந்நிலையில், மழை பெய்யும் போது குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறுவதற்கு வழியின்றி சில தனிநபர்கள் கட்டடங்கள் கட்டியுள்ளதால் மழைநீர் குடியிருப்புகளில் தேங்கி நிற்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.சில நாட்களுக்கு முன் பெய்த, 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையால் மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளில் 1 வாரமாக குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, தண்ணீர் நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வள்ளியம்மாபுரம் பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை