உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி துணை மின்நிலைய வளாகத்தில் மழைநீர் தேக்கம்

பொன்னேரி துணை மின்நிலைய வளாகத்தில் மழைநீர் தேக்கம்

பொன்னேரி:பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில், 33கே.வி., துணை மின்நிலையம் அமைந்து உள்ளது. இங்கிருந்து, பொன்னேரி நகரம், அனுப்பம்பட்டு, திருவேங்கிடபுரம், பெரும்பேடு, ரெட்டிப்பாளையம், சின்னகாவணம், உப்பளம், எலவம்பேடு என, 100க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது.கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் துணை மின்நிலைய வளாகம் முழுதும் மழைநீர் தேங்கி உள்ளது. அங்குள்ள அலுவலக கட்டடங்கள், மின்கட்டணம் செலுத்துமிடம், ஆப்ரேட்டர் அறை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், மின்பயனீட்டாளர்கள் பல்வேறு தேவைகளுக்கு அங்கு சென்று வரும்போது சிரமத்திற்கு ஆளாகின்றனர்.கடந்த, 1955ல் அமைக்கப்பட்ட இந்த துணை மின்நிலையம், தரம் உயர்த்தப்படாமலும், அத்யாவசிய கட்டமைப்பு மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மின்மாற்றிகள், மின்வினியோகம் செய்யும் மின்சாதனங்கள் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவதால், மின்பராமரிப்பு பணிகளும், மின்வினியோகமும் பாதிக்கிறது.துணை மின்நிலைய வளாகத்தில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவும், தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்மபடுத்தவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !