உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தெருவில் கட்டிய புதிய பாலம் திசை மாறி செல்லும் மழைநீர்

தெருவில் கட்டிய புதிய பாலம் திசை மாறி செல்லும் மழைநீர்

ஆர்.கே.பேட்டை, தெருவின் குறுக்கே மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பாயும் ஓடையில், வடக்கு - தெற்காக கட்டியுள்ள பாலத்தால், மழைநீர் திசை மாறி செல்கிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த நடுபந்திகுப்பம் கிராமத்தில், தெருவின் குறுக்காக ஓடை பாய்கிறது. இதனால், மழைக்காலத்தில் தெருவின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாமல் பகுதிமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இங்கு, சமீபத்தில் பாலம் கட்டப்பட்டது. ஆனால், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பாயும் ஓடையில், வடக்கு - தெற்காக பாலம் கட்டப்பட்டுள்ளதால், மழைநீர் திசை மாறி செல்கிறது. இதனால், பாலம் கட்டியும் வெள்ள அபாயம் தீரவில்லை. இந்த பாலமும், ஓடையின் ஒரு பகுதியில் மட்டுமே அமைந்துள்ளது. பாலத்தை சீரமைக்கும் வகையில், பாலத்தின் நீளத்தை அதிகரித்து, மேற்கு நோக்கி விரவாக்கம் செய்ய வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை