உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அங்கன்வாடியில் ஒழுகும் மழைநீர் மேல்நல்லாத்துார் குழந்தைகள் அவதி

அங்கன்வாடியில் ஒழுகும் மழைநீர் மேல்நல்லாத்துார் குழந்தைகள் அவதி

மேல்நல்லாத்துார் : கடம்பத்துார் ஒன்றியம், மேல்நல்லாத்துார் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 14 ஆண், 11 பெண் என மொத்தம் 25 குழந்தைகள் உள்ளனர்.இந்த மையம், சில மாதங்களுக்கு முன் தனியார் தொழிற்சாலை சி.எஸ்.ஆர். நிதியின் கீழ், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பீல் பெயளவிற்கு சீரமைக்கப்பட்டது.'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட மழையில் இந்த கட்டட கூரை வழியாக மழைநீர் ஒழுகி அங்கன்வாடி மையம் குளம்போல் மாறியுள்ளது.இந்நிலையில் நேற்று அங்கன்வாடி மையத்திற்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளை அதன் பொறுப்பாளர் மழைநீர் தேங்கியிருந்ததால் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.எனவே, மாவட்ட நிர்வாகம் மேல்நல்லாத்துாரில் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்த கடம்பத்துார் பி.டி.ஓ., மணிசேகர் கூறியதாவது:''அங்கன்வாடி குளமாக மாறியது குறித்து புகார் வந்துள்ளது.இதுகுறித்து அங்கன்வாடி மைய அதிகாரியிடம் கேட்ட போது மாவட்ட நிர்வாகத்திடம் தனியார் தொழிற்சாலையினர் சி.எஸ்.ஆர்., நிதியில் பணிகள் மேற்கொள்ள உத்தரவு வாங்கி செய்தது தெரிந்தது.மேலும், அங்கன்வாடி மையம் சீரமைத்தது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நேரில் சென்று ஆய்வு நடத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொண்ட தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை