உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உயர்த்தப்பட்ட நத்தம் சாலை திணறும் வாகன ஓட்டிகள்

உயர்த்தப்பட்ட நத்தம் சாலை திணறும் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தம்புரெட்டிபாளையம் முதல் நத்தம் வரையிலான, 3.2 கிமீ., சாலை, ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன், மாநில நெடுஞ்சாலை துறையின் நபார்டு கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அந்த சாலை இணைக்கப்பட்டது.படுமோசமான நிலையில் இருந்த அந்த சாலையை புதுப்பிக்க, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலை பணிகளை துரிதமாக மேற்கொண்டு முடித்தனர். சாலையில் தண்ணீர் தேங்கினால் விரைவில் பழுதாக கூடும் என்பதால், சாலையை உயரமாக அமைத்தனர். ஆனால், எதிர் எதிரே இரு கார்கள் கடக்க நேரிட்டால் சாலையை விட்டு இறங்கி கடக்க முடியாத அளவிற்கு உயரமாக அமைக்கப்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் சற்று கவனம் தவறினாலும் சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விழும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. இரவு நேரத்தில் அனைத்து வாகனங்களும் அச்சத்துடன் அந்த சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சாலை அமைத்த நெடுஞ்சாலை துறையினர், குறுகலான அந்த சாலையை ஒட்டி வாகனங்கள் இறங்கி கடந்து செல்ல ஏற்றபடி இடம் ஒதுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி