உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கரியமாணிக்கர் கோவிலில் வரும் 4ல் ரத சப்தமி விழா

கரியமாணிக்கர் கோவிலில் வரும் 4ல் ரத சப்தமி விழா

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது கமலவல்லி சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில். இக்கோவிலில், தை மாதம் நடைபெறும் ரத சப்தமி விழா, நாளைமறுதினம் நடைபெற உள்ளது.அன்றைய தினம் காலை மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை சூர்யபிரபை, சேஷ, யாளி, குதிரை, கருட, அனுமந்த, சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ