ரேஷன் கட்டடம் திறப்பு
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னகளக்காட்டூர் கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.கடந்த 30 ஆண்டுகளாக ரேஷன் கடை, தனியார் கட்டடத்திலும், கோவில் வளாகத்திலும் தற்காலிகமாக இயங்கி வந்தது. இதனால் நூகர்வோர் அவதியடைந்தனர்.இதையடுத்து, கடந்த மார்ச்சில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரேஷன் கட்டடம் கட்ட அதே மாதம் டெண்டர் விடப்பட்டு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.கட்டடப் பணி முடிந்த நிலையில், நேற்று, பெரியகளக்காட்டூர் ஊராட்சி தலைவர் மணிமேகலா, மக்கள் பயன்பாட்டிற்கு ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்தார்.