உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று ரேஷன் கார்டுதாரர் குறைதீர் கூட்டம்

இன்று ரேஷன் கார்டுதாரர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று, ரேஷன் கார்டுதாரர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களில், இன்று, ரேஷன் கார்டுதாரர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.ரேஷன் கார்டுகளில், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான குறைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.மேலும், முன்னுரிமை மற்றும் 'அந்த்யோதயா அன்ன யோஜனா' ரேஷன் கார்டுதாரர்கள், அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல்ரேகையை அருகில் உள்ள ரேஷன் கடையில் பதிவு செய்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி