உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆந்திரா கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திரா கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே, போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திரா நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட சிறிய சரக்கு வாகனம், போலீசாரை கண்டதும் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த ஓட்டுநர் கீழே இறங்கி தப்பியோடினார். அந்த வாகனத்தை சோதனையிட்ட போது, 66 மூட்டைகளில், 3,178 கிலோ எடை கொண்ட தமிழக ரேஷன் அரிசி இருந்தன. வாகனத்துடன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை