உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாசிப்பு திறனை மேம்படுத்த வாசகர் திட்டம்

வாசிப்பு திறனை மேம்படுத்த வாசகர் திட்டம்

திருவள்ளூர் : பள்ளி மாணவ, மாணவியருக்கு வாசிப்பு திறனை மேம்படுத்த 'இளம் வாசகர்' திட்டம் துவக்கப்பட்டது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நுாலகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், இளம் வாசகர் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் பிரபுசங்கர் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் இருந்து 6-8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தி, சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையில், 'இளம் வாசகர்கள்' என்ற சிறப்பு திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இதன்வாயிலாக, அரசு பள்ளி மாணவ -- மாணவியரின் வாசிப்பு திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்க புதிய முயற்சியாக எடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது நுாலகத்திற்கு 6-8ம் வகுப்பு மாணவர்கள், தினமும் 2 பள்ளிகள் வீதம் 80 மாணவர்களை அழைத்து புத்தகங்களை வாசிக்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர், ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - கல்வி பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி