மேலும் செய்திகள்
பாலாற்றில் வாலிபர் சடலம் மீட்பு
28-Jan-2025
மீஞ்சூர், சென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக்குமார், 38; இவர், கடந்த 15ம் தேதி, மீஞ்சூரில் நடைபெற்ற நண்பரின் மகன் திருமணத்திற்கு வந்திருந்தார்.அன்று இரவு வீடு திரும்பாததாலும், அவரது மொபைல்போன், 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்ததாலும், குடும்பத்தினர், இது குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் அசோக்குமாரை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே, சாலையோர கால்வாயில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக துாய்மை பணியாளர்கள் வாயிலாக, மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்று கால்வாயில் இருந்த சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டதில், கடந்த, 15ம் தேதி காணாமல் போன அசோக்குமார் என்பது தெரிந்தது.அதையடுத்து அசோக்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.திருமணத்திற்கு வந்தவர் மர்மமான முறையில் கால்வாயில் இறந்து கிடந்தார்.
28-Jan-2025