உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புன்னப்பாக்கத்தில் சமுதாய கூடம் சீரமைப்பு

புன்னப்பாக்கத்தில் சமுதாய கூடம் சீரமைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, புன்னப்பாக்கம் ஊராட்சியில், சேதமடைந்த சமுதாய கூடம் புனரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னப்பாக்கம் ஊராட்சியில், 1,200 வீடுகளில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் வசிப்போர், தங்கள் இல்ல விசேஷங்களை குறைந்த செலவில் நடத்த, 12 ஆண்டிற்கு முன் சமுதாய கூடம் அமைக்கப்பட்டது.அந்த சமுதாய கூடம், முறையான பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்தது. இதனால், கிராமவாசிகள், ஈக்காடு, திருவள்ளூர் பகுதிகளில் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை கூடுதல் செலவிட்டு நடத்தி வந்தனர்.சேதமடைந்த சமுதாய கூடத்தை சீர்படுத்த வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, ஒன்றிய நிர்வாகம், சேதமடைந்த சமுதாய கூடத்தை சீர்படுத்தி, வர்ணம் தீட்டி புனரமைத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ