உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமடைந்த திருமழிசை நெடுஞ்சாலை சீரமைப்பு

சேதமடைந்த திருமழிசை நெடுஞ்சாலை சீரமைப்பு

கடம்பத்துார்:திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணவாளநகர் அடுத்துள்ளது அரண்வாயல். இங்கிருந்து கொப்பூர், பாப்பரம்பாக்கம், மண்ணுார் வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் கொப்பூர், பாப்பரம்பாக்கம், அரண்வாயல் ஆகிய பகுதிகளில் சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியிருந்தது. இதனால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று இந்த நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி மேற்கொண்டனர். இதேபோல் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சேதமடைந்த பகுதிகளை நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று சீரமைப்பு பணி மேற்கொண்டனர். மேலும் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மண்ணுார் சாலை சந்திப்பு முதல் திருவள்ளூர் வரை சேதமடைந்த நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !