உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே, கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு, 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் வழித்தடத்தில், போந்தவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. ஊத்துக்கோட்டையில் இருந்து சூளூர்பேட்டை, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் மட்டுமே, இந்த வழித்தடத்தில் இயக்கப் படுகின்றன. திருவள்ளூர் அரசு பணிமனையில் இருந்து, ஒரேயொரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சேவை போதுமானதாக இல்லை. எனவே, ஊத்துக் கோட்டை அரசு பணிமனை யில் இருந்து, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை