ஊத்துக்கோட்டை - கிளாம்பாக்கம் நேரடி பஸ் இயக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் இருந்து கோயம்பேடு, திருச்சி, கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், காளஹஸ்தி, திருப்பதி, நெல்லுார் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தென் மாநிலங்களுக்கு செல்பவர்கள் கோயம்பேடு சென்று தங்களது ஊர்களுக்கு சென்று வந்தனர். தற்போது அவர்கள் கிளாம்பாக்கம் சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ளவர்கள் பல பேருந்துகள் மாறி பயணித்து கிளாம்பாக்கம் செல்கின்றனர்.எனவே, பயணியர் நலன்கருதி ஊத்துக்கோட்டையில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல நேரடி பேருந்து போக்குவரத்தை துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.