உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்வாரியத்தில் காலி இடம் பணியாளர் நிரப்ப கோரிக்கை

மின்வாரியத்தில் காலி இடம் பணியாளர் நிரப்ப கோரிக்கை

பொன்னேரி,:பொன்னேரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட, மின்வாரிய அலுவலக கிழக்கு பிரிவில், சக்தி நகர், திருவாயற்பாடி, சின்னகாவணம், ஆலாடு, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டில், 3,000க்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன.இங்கு உதவி பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அதேபோன்று மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு போதிய ஊழியர்களும் இல்லை.இதனால், மேற்கண்ட பகுதிகளில் ஏற்படும் மின்பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய முடியாத நிலை உள்ளது.பொன்னேரி மின்வாரிய கிழக்கு பிரிவு அலுவலகத்திற்கு, உதவி பொறியாளர் மற்றும் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக பொன்னேரி, பாலாஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துஉள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:உதவி பொறியாளர்மற்றும் ஊழியர்கள் பற்றாக் குறையால், பராமரிப்பு பணிகள் பாதிக்கிறது.அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனால் ஆர்ப்பாட்டம், போராட்டம் என சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகிறது.குடியிருப்புகளுக்கு தடையின்றி, சீரான மின்வினியோகம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை