உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி - வஞ்சிவாக்கம் அரசு பஸ் இயக்க கோரிக்கை

பொன்னேரி - வஞ்சிவாக்கம் அரசு பஸ் இயக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஏருசிவன், மடிமைகண்டிகை, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள் கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரிக்கு வந்து செல்கின்றனர்.மேற்கண்ட கிராமங்கள் வழியாக பேருந்து சேவை இல்லை. இக்கிராம வாசிகள், 3 கி.மீ., நடந்து சென்று, பொன்னேரி - பழவேற்காடு வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் நிலை உள்ளது.இதனால் கிராமவாசிகள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வியும் பாதிக்கிறது. பொன்னேரியில் இருந்து மேற்கண்ட கிராமங்கள் வழியாக வஞ்சிவாக்கம் வரை பேருந்து இயக்க வேண்டும் என, கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.மேலும், போக்குவரத்து துறை அதிகாரிகள், முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட நிர்வாகம் என, பல்வேறு தரப்பினரிடம் கிராமவாசிகள் மனு அளித்தனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, நலத்திட்ட உதவிகள் வழங்க, பொன்னேரி தொகுதிக்கு வரும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !