உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி நீர்த்தேக்க பகுதியில் கழிப்பறை அமைக்க கோரிக்கை

பூண்டி நீர்த்தேக்க பகுதியில் கழிப்பறை அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம். 1944ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் முக்கிய நீராதாரம்சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நீர்த்தேக்கம் முழுதும் தண்ணீர் நிறைந்தால், கடல் போல காட்சியளிக்கும். இது போன்ற சமயங்களில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர்.சமீபத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பூண்டியில் குவிந்தனர். இது போன்ற சமயங்களில் இங்கு கழிப்பறை வசதி இல்லாததால், அவதிப்பட்டனர்.குறிப்பாக, பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே, சுற்றுலா தலமாக உள்ள பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ