மேலும் செய்திகள்
பழுதடைந்த வி.ஏ.ஓ., கட்டடம்
03-Apr-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த துணை சுகாதார நிலையம் வாயிலாக அரிசந்திராபுரம், தொழுதாவூர், சின்னம்மாபேட்டையைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.நான்கு ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்தது. இதையடுத்து, ஊராட்சி சார்பில், அங்கன்வாடி மையம், சமுதாய கூட கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் காத்திருக்க முடியாத சூழலும் உள்ளது.அதேபோல, கர்ப்பிணியர் பரிசோதனை செய்ய இடவசதி இன்றி சிரமமாக உள்ளது. இதனால், கர்ப்பிணியர், 5 கி.மீ துாரமுள்ள திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சிலர் தனியார் மருத்துவமனைக்கும் செல்லும் நிலை உள்ளது.எனவே, சின்னம்மாபேட்டையில் பழுதடைந்த துணை சுகாதார நிலைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்ப்பிணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
03-Apr-2025