மேலும் செய்திகள்
சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி உலா வரும் கால்நடைகள்
22-Apr-2025
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாநில நெடுஞ்சாலையில் இருந்து, அரை கிலோ மீட்டர் துாரம் உள்ளதால் பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மண்சாலை வழியாக நடந்து செல்கின்றனர்.மழை பெய்யும் போது, மண்சாலை முழுவதும் சகதியாக மாறிவிடுகிறது.சாலையில் மழைநீர் தேங்கி விடுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமமடைகின்னறர்.மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லை.எனவே மாவட்ட நிர்வாகம், மாணவர்கள் நலன்கருதி, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.**
22-Apr-2025