உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெத்திக்குப்பம் - ஈகுவார்பாளையம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை

பெத்திக்குப்பம் - ஈகுவார்பாளையம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில் இருந்து மாதர்பாக்கம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.இச்சாலையில், மாதர்பாக்கம் அருகே புதிதாக வரவுள்ள மாநெல்லுார் சிப்காட் வளாகம் உள்ளது. மாநெல்லுார் சிப்காட் வளாகத்தில் இருந்து ஈகுவார்பாளையம் வரையிலான சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆனால், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெத்திக்குப்பம் சந்திப்பில் இருந்து ஈகுவார்பாளையம் வரையிலான சாலை இரு வழிச்சாலையாகவே உள்ளது. இச்சாலை வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான டிரைலர் லாரிகள், அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில் உள்ள காயலார்மேடு, நாகராஜகண்டிகை ஆகிய இரு கிராம பகுதிகளில் உள்ள வளைவுகளில், டிரைலர் லாரிகள் எதிரெதிரே செல்ல முடியாமல் அடிக்கடி சிக்க நேரிடுகிறது.இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்து, அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இரு கிராம பகுதிகளில் சாலையை ஒட்டி வீடுகள் இருப்பதால், கிராம மக்களுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.எனவே, மேற்கண்ட இரு கிராம பகுதிகளில் பைபாஸ் சாலை அமைத்து, பெத்திக்குப்பம் முதல் ஈகுவார்பாளையம் வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகளும், தொழிற்சாலை நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ