சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்
திருவள்ளூர்:திருவள்ளூர் ஜே.என்.சாலை, ஆயில்மில் நிறுத்தம் அருகில், தனியார் திருமண மண்டபம் எதிரில், பூங்கா நகருக்கு செல்லும் இந்திரா காந்தி சாலை பிரிகிறது.இவ்வழியாக வேகமாக வரும் வாகனங்களால், பூங்கா நகர் சென்று, வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கடும் சிரமப்படுகின்றனர். இந்த இடத்தில், சாலையின் இரண்டு முனையிலும், வேகத்தடை அமைத்தால், வேகமாக வரும் வாகனங்கள், வேகம் குறைந்து செல்லும்; அந்த சமயத்தில், சாலையைக் கடக்க முயல்வோர், எளிதாக செல்ல முடியும்.எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், இந்த இடத்தை ஆய்வு செய்து, சாலையின் இரண்டு பகுதியிலும், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.