ஊராட்சி அலுவலக புது கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுகோள்
திருவாலங்காடு,:நார்த்தவாடா ஊராட்சியில், கட்டி முடித்து ஆறு மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள, ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா ஊராட்சியில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி அலுவலகத்திற்கு கட்டடம் கட்டப்பட்டது.இந்த கட்டடம் சேதமடைந்த நிலையில், தற்காலிகமாக இ- - -சேவை மைய கட்டடத்திற்கு ஊராட்சி அலுவலகம் மாற்றப்பட்டு, தற்போது வரை அங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊராட்சி அலுவலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அங்கன்வாடி மையம் எதிரே அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2022 - --23ம் ஆண்டில், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி கடந்த ஜனவரியில் முடிக்கப்பட்டுள்ளது.கட்டி முடித்து ஆறு மாதங்களாகியும், தற்போது வரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.எனவே, நார்த்தவாடா ஊராட்சி அலுவலக கட்டடத்தை, விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.