உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடை மருந்தக வளாகத்தில் மரக்கன்று நட கோரிக்கை

கால்நடை மருந்தக வளாகத்தில் மரக்கன்று நட கோரிக்கை

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த கால்நடை மருந்தகம், போதிய இடவசதி இல்லாததால், கடந்த 2015ல் காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பொதட்டூர்பேட்டை கால்நடை மருந்தகம் திறக்கப்பட்டது.கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மருந்தக வளாகத்தில், தற்போது மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படவில்லை. இதனால், சிகிச்சைக்காக மருந்தகத்திற்கு ஓட்டி வரப்படும் கால்நடைகள், வெயிலில் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம் புதுார் மேடு கிராமத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருந்தக வளாகமும், 10 ஆண்டுகளுக்கு முன் மரக்கன்றுகள் ஏதும் இன்றி வெட்டவெளியாக காணப்பட்டது. அதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, அந்த வளாகத்தில் உடனடியாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டன. தற்போது, அந்த வளாகம் காடு போல் காணப்படுகிறது. எனவே, பொதட்டூர்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்திலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ