உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடு சாலையோர முட்செடிகள் அகற்ற கோரிக்கை

பழவேற்காடு சாலையோர முட்செடிகள் அகற்ற கோரிக்கை

பழவேற்காடு:பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், சின்னகாவணம் முதல் மெதுார் வரை உள்ள பகுதியில் மட்டுமே நிழல் தரும் மரங்கள் உள்ளன. மெதுாரில் இருந்து பழவேற்காடு வரை உள்ள சாலையோர பகுதிகளில் முட்செடிகளே காடு போல் வளர்ந்துள்ளன.அப்பகுதிகளில் நிழல் தரும் மரங்கள் ஏதும் இல்லாததால், பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணியர், இளைப்பாறுவதற்கு இடமின்றி தவிக்கின்றனர். தற்போது, கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் நிழலில் நிற்க முடியாமல் தவிக்கின்றனர்.குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் பயணிப்போரின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. மேலும், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோரங்களில் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, பொன்னேரி - பழவேற்காடு சாலையோரங்களில் உள்ள முட்செடிகளை முழுமையாக அகற்றிவிட்டு, அங்குள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப நிழல் தரும் மரங்களை வைத்து பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ