உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளத்தை சீரமைக்க கோரிக்கை

குளத்தை சீரமைக்க கோரிக்கை

மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளட்டீ கிராமத்தில், சுடுகாடு அருகே உள்ள பொதுக்குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. குளம் முழுதும் பாசி படிந்து இருப்பதால், கால்நடைகள், அருகில் வசிக்கும் கிராமவாசிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.குளத்தை சுற்றிலும் முள்செடிகள் வளர்ந்துள்ளன. எனவே, குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை கால்நடைகளும், கிராமவாசிகளும் பயன்படுத்தும் வகையில் தூர்வாரி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ