உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அத்திப்பட்டில் குறுகலான கால்வாய் பாலத்தை விரிவுபடுத்த கோரிக்கை

அத்திப்பட்டில் குறுகலான கால்வாய் பாலத்தை விரிவுபடுத்த கோரிக்கை

மீஞ்சூர்:அத்திப்பட்டு பகுதியில் உள்ள குறுகலான பாலத்தால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகம், வடசென்னை அனல் மின்நிலையங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் மழைநீர் கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டு உள்ள பாலம் குறுகலாக உள்ளது. சாலை அகலமாகவும், பாலம் குறுகலாகவும் இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். தடுப்புச்சுவர் மற்றும் எச்சரிக்கை பலகை இல்லாததால், வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் அத்திப்பட்டில் இருந்து துறைமுகங்கள் நோக்கி, இச்சாலையின் இடதுபுறமாக பயணிக்கும் வாகனங்கள், மேற்கண்ட பாலத்தை கடக்கும்போது, வலதுபுறம் செல்கையில், எதிரில் வரும் வாகனங்கள் தடுமாறுகின்றன. இச்சாலையில் புதிதாக செல்வோர் ஒருவித அச்சத்தில் செல்கின்றனர். என, குறுகிய பாலத்தை விரிவுபடுத்தி, தடுப்புச்சுவர் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை