உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருமழிசை வளமீட்பு பூங்காவில் குவிந்து வரும் குப்பை கழிவுகள் நோய் பரவும் அச்சத்தில் குடியிருப்பு மக்கள்

 திருமழிசை வளமீட்பு பூங்காவில் குவிந்து வரும் குப்பை கழிவுகள் நோய் பரவும் அச்சத்தில் குடியிருப்பு மக்கள்

திருமழிசை: திருமழிசையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளமீட்பு பூங்காவில் குவிந்து வரும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், குடியிருப்பு மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருமழிசை பேரூராட்சியில், 10 ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 2.32 ஏக்கர் பரப்பளவில் வளமீட்பு பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு, பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை கொண்டு வரப்பட்டு, மட்கும் மற்றும் மட்காத குப்பை என, தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட பின் சேகரமாகும் குப்பை, அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், அருகே உள்ள குடியிருப்பு மக்கள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, வளமீட்பு பூங்காவில் குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை