உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அறிவிப்பில்லாத மின்வெட்டால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி

அறிவிப்பில்லாத மின்வெட்டால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி

கடம்பத்துார், மே 31-கடம்பத்துாரில் அமைந்துள்ள துணைமின் நிலையம் வாயிலாக கடம்பத்துார், புதுமாவிலங்கை, பிரையாங்குப்பம், காரணி உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதில் கடம்பத்துார், பிரையாங்குப்பம், காரணி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், தினமும் பகல் நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும், இரவு நேரங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் மின் வினியோகம் தடைபடுகிறது. இதனால், பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமன, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கடம்பத்துார் மின்வாரிய அதிகாரி கூறியதாவது:சில நாட்களாக பலத்த காற்று வீசி, அவ்வப்போது மழை பெய்ததால், மின்கம்பிகள் உராய்வு ஏற்பட்டதில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. ரமின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணி மேற்கொணடனர்.வரும் காலங்களில் மின்தடை ஏற்படும் போது, மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தால், உடனடியாக மின்வெட்டு சரிசெய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை