குளம்போல் கழிவுநீர் கலந்த மழைநீர் காக்களூர் குடியிருப்புவாசிகள் அவதி
திருவள்ளூர்:திருவள்ளுர் அடுத்த காக்களூர் பூந்தோட்டம் மற்றும் சாய் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதால் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் காலி மனைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து குளம்போல் மாறியுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுளை விட்டு வெளியே வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீரால் துார்நாற்றம் ஏற்படுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.