உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓடையில் மண் எடுக்க எதிர்ப்பு கூடுவாஞ்சேரி வாசிகள் முற்றுகை

ஓடையில் மண் எடுக்க எதிர்ப்பு கூடுவாஞ்சேரி வாசிகள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி:பொன்னேரி அருகே ஆரணி ஆற்றங்கரையை பலப்படுத்த ஓடையில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசு அலுவலர்களை கூடுவாஞ்சேரி கிராமவாசிகள் முற்றுகையிட்டு, வாக்குவாதம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொன்னேரி அருகே கூடுவாஞ்சேரி கிராம ஓடையில் இருந்து மண் எடுத்து, அப்பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையை பலப்படுத்த, நீர்வளத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, நேற்று பணிகளை மேற்கொள்ள கூடுவாஞ்சேரி ஓடைக்கு சென்றனர்.தகவல் அறிந்து சென்ற கிராமவாசிகள், ஓடையில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். ஓடையில் மண் எடுத்தால், ஆழம் அதிகரித்து, மக்கள் மட்டுமின்றி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என தெரிவித்தனர்.சமாதானம் பேச முயன்ற வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மாற்று இடத்தில் மண் எடுத்துக் கொள்வதாக, அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்பின், கிராமவாசிகள் கலைந்து சென்றனர். ஓடையில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசு அலுவலர்களிடம் கிராமவாசிகள் வாக்குவாதத்தல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி